மூன்று ஆண்டுகள்  நடிப்புக்கு குட் பாய் ?  தீவிரமாக அரசியலில் இறங்கும் நடிகர் விஜய்.!!

மூன்று ஆண்டுகள்  நடிப்புக்கு குட் பாய் ?  தீவிரமாக அரசியலில் இறங்கும் நடிகர் விஜய்.!!

சென்னை 03 ஜூலை 2023 தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் மூன்று ஆண்டுகள் திரைப்பட துறையை இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும்  தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராக போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

நடிகர் விஜய்யின் மூன்று ஆண்டு கால ஓய்வு முடிவு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வரவில்லை என்றாலும், இந்த தகவல்கள் உண்மையாக இருக்கலாம் என மக்களிடையே கருத்துகள் உருவாகியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் அதிகமான சம்பளம், தமிழக மக்களிடையே மிகப்பெரிய ஓப்பனிங், கோடிக்கணக்கான ரசிகர்கள் என நடிகர் விஜய்யின் திரைப்பட உலகில் எப்போதுமே நம்பர் ஒன் தான் விஜய்.

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்தது.

இதற்கு பிறகாக தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய்.

இந்த லியோ திரைப்படத்தில்  சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், த்ரிஷா பல நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த லியோ திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் வைக்கப்படாத “தளபதி 68” திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைகிறார் நடிகர் விஜய்.

இந்த “தளபதி 68” திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த “தளபதி 68” திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நடிகர் விஜய்யின் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்குள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் மூன்று ஆண்டுகள்  திரைப்பட துறையில் இருந்து ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் பல வருட கோரிக்கையாக இருக்கின்றது.

அரசியல் பிரவேசத்திற்கு தற்போது நடிகர் விஜய்யும் தயாராகிவிட்டார் என தெரிகிறது.

ஏற்கனவே நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் பெற்றது.

முறையான கட்சியாக பதிவு செய்யப்படாவிட்டாலும், விஜய்யின் மக்கள் இயக்கம் பல விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.

இது மக்கள் மத்தியில் நடிகர் விஜய்க்கு ஒரு நல்ல விதமான அபிப்ராயத்தை ஏற்படுத்திருக்கிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழாவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் பணம் வாங்கி கொண்டு வாக்களிக்க கூடாது என மேடையில் பேசினார், இது அங்கிருந்த மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசிய அரசியல் கருத்துகள் தமிழகத்தில் தலைப்பு செய்தியாக மாறியது.

தற்போது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலில் நடிகர் விஜய் இறங்கப்போவதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியலில் முழு கவனம் செலுத்த மூன்று ஆண்டுகளுக்கு திரைப்பட துறையில் இருந்து ஒதுங்கி இருப்பதாக  முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்திற்க்கு பிறகு நடிகர் விஜய் இந்த முடிவை அறிவிப்பார் என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!