காதலர் தினத்தில் ஒரு குட்டி கதை பாடும் மாஸ்டர் நடிகர் விஜய்

காதலர் தினத்தில் ஒரு குட்டி கதை பாடும் மாஸ்டர் தளபதி நடிகர் விஜய்

பொதுமேடைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது ஒரு குட்டி கதையை சொல்வார். அதுபோல் அண்மைக்காலமாக அதே பாணியை தளபதி நடிகர் விஜய்யும் கடை பிடித்து வருகிறார்.

மெர்சல், சர்கார் பட விழாக்களில் குட்டி கதைகளை சொன்னார்.

பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பட்டாசு & பூக்கடை குட்டி கதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக்காக ஒரு குட்டி கதை என்ற பாடலை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளனர்.

அதாவது பிப்ரவரி 14ல் மாலை 5 மணிக்கு இப்பாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தில் தளபதி நடிகர் விஜய்யுடன் மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை தளபதி விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாக உள்ளது.

error: Content is protected !!