சென்னை அடையாறில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'( Kiki’s Dance Studio)வை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு!
சென்னை அடையாறில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'( Kiki’s Dance Studio)வை தொடங்கிய நடிகை கிகி சாந்தனு!

கிகி சாந்தனு கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராய நகரில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’வை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.இங்கு ஃபிட் கிட்ஸ் எனும் உடற்பயிற்சி கூடம் உள்ளது . அவர்களுடன் இணைந்து, ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’வை தொடங்கியிருக்கிறார்.
இதன் தொடக்க விழாவில் பூர்ணிமா பாக்யராஜ், கே. பாக்யராஜ், நடிகர் கலையரசன், பரத், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி, சம்யுக்தா ஷான், திருமதி சுஹாசினி மணிரத்னம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு கிகி சாந்தனு மற்றும் சாந்தனு பாக்யராஜிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.இந்த டான்ஸ் ஸ்டுடியோவில் சோர்வான மனநிலையில் வருகை தந்தாலும் அல்லது உற்சாகமற்ற சூழலில் வருகை தந்தாலும்.. உங்கள் மனதுக்கு பிடித்த பாடலை ஒலிக்க விட்டு.. அதற்காக உங்களுக்கு சௌகரியமான முறையில் டான்ஸ் ஆடினால்.. உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைந்து மகிழ்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.
சென்னை தி. நகரை தொடர்ந்து அடையாறு பகுதியிலும் தன்னுடைய கலை சேவையை விரிவு படுத்தி இருக்கும் நாட்டிய மங்கை கிகி சாந்தனுவை திரையுலகத்தினரும், கலை உலகத்தினரும் மனதார வாழ்த்துகிறார்கள்.
இந்த டான்ஸ் ஸ்டுடியோவின் உள்கட்டமைப்பு.. நடன கலைஞர்கள் நடனப் பயிற்சி பெறுவதற்கு வசதியாக பிரத்யேகமான முறையிலும், சர்வதேச தரத்திலும் ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் தனி சிறப்பம்சம்.
Related posts:
நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை அதுல்யா ரவி ஜோடியாக நடித்திருக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்”. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
நடிகர் ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா !
ஸ்டுடியோ யூனோ ரெக்கார்ட்ஸ்’ – வடபழனியில் உலகதரத்தில் ஒரு ஆடியோ ஸ்டுடியோ உதயம்
திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!!
தயாராகட்டும் டான்ஸ் ஃப்ளோர் , இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல், நவம்பர் 20 அன்று, வெளி வருகிறது !
சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான அதிநவீன வசதிகளுடன் புதிதாக அமைந்துள்ளது !!
மாஸ்டர் தான் என் முதல் திரைப்படம்.. இசை வெளியீடு விழாவில் – நடிகர் சாந்தனு கொடுத்த ஷாக்
நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!!
தளபதி – தல ரசிகர்களை சமாதானம் செய்யும் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிக்கும், இராவணகோட்டம் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

