நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது!!
நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது!!பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
பாகுபலி 2க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
கல்கி 2898 AD உண்மையில் தென்னிந்தியத் திரைப்படங்களில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு, இந்த சாதனையை படைத்துள்ளது.
இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் $17 மில்லியனைத் தாண்டியுள்ளது மேலும் இந்த பிராந்தியத்தில் பாகுபலி 2 படத்திற்கு அடுத்து இந்த சாதனையைச் செய்துள்ளது.
கல்கி 2898 AD யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் இன்னும் சில நாடுகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், ஒரு உலகத் தரத்தில், மிகச்சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன், மாயாஜால காட்சிகளும் முற்றிலும் புதிய களத்தில் வெளியான இப்படம் பார்வையாளர்களுக்கு
மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்தது.
ஹீரோ பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் மற்ற குழு உறுப்பினர்கள் அனைவரையும் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
Related posts:
இந்திய திரைப்பட உலகில் இரண்டு ஜாம்பவான்கள் அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
தமிழிலும் 28 கோடி வசூலித்து சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’ !!
பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !
பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ். !!
இந்தியத் திரையுலகில் ஒரே நேரத்தில் ரூபாய்.1000 கோடி பட்ஜெட்டில் நடித்துவரும் ஒரே நடிகர் பிரபாஸ்தான் சாதனையின் உச்சம் !!
பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்! வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் ‘நடிகையர் திலகம்’ புகழ் பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்
பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்” !
பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏ டி ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு !!
‘கல்கி 2898 AD’ படத்தின் தீம் மியூசிக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் “நீயே ஒளி” இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டது!!
‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !!

