இந்தியத் திரையுலகில் ஒரே நேரத்தில் ரூபாய்.1000 கோடி பட்ஜெட்டில் நடித்துவரும் ஒரே நடிகர் பிரபாஸ்தான் சாதனையின் உச்சம் !!

சென்னை : 08 டிசம்பர் 2020

இந்தியாவில் பாகுபலி திரைப்படத்திற்கு முன்பு பாகுபலி திரைப்படத்திற்கு பின்பு என பிரிக்குமளவுக்கு ஒரு பெரும் வசூல் புரட்சியை உண்டாக்கியது பாகுபலி அந்த திரைப்படம்.

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-1 பாகுபலி-2 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபாஸின் மார்க்கெட் அந்த திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மார்க்கெட் உச்சத்துக்குச் சென்றது.

இன்றைய தேதியில் தென்னிந்திய திரைப்பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு திரைப்படத்திற்கு ரூபாய் 100 கோடி வாங்கும் ஒரே நடிகர் பிரபாஸ் மட்டுமே.

தற்போது அவர் நடித்து வரும் திரைப்படங்கள் ராதே ஸ்யாம், சலார், ஆதிபுருஸ் மற்றும் நாக் அஷ்வின் ஆகிய நான்கு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

பிரபாஸ் அவர்களுக்கு இந்த திரைப்படங்களில் சம்பளம் மட்டுமே ரூபாய் 400 கோடி ஆகும்.

அதேசமயம் இந்த நான்கு திரைப்படங்களின் பட்ஜெட் மதிப்பு ரூ. 1000 கோடியைத் தாண்டுகிறது.

இந்தியத் திரையுலகில் ஒரேநேரத்தில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் நடித்துவரும் ஒரே நடிகர் பிரபாஸ்தான் என்று அவரை திறமை மற்றும் வளர்ச்சியை வியந்து பார்க்கின்றனர்.