அரசியலும் ஆன்மீகமும் எனது இரண்டு கண்கள் தவெக மாநாட்டில் தலைவர் விஜய் பேச்சு !!

அரசியலும் ஆன்மீகமும் எனது இரண்டு கண்கள் தமிழக வெக மாநாட்டில் தலைவர் விஜய் பேச்சு !!

சென்னை 28 அக்டோபர் 2024 தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற்றது.நேற்று 27/10/2024 அன்று பிற்பகல் 3 மணி அளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கியதுடன் நடிகர் தளபதி விஜய் நடித்த திரைப்படங்களில் இருந்து அரசியல் பேசும் பாடல்கள்  இசைக்கப்பட்டன.அதன் பின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடிப் பாடல் ஒளிபரப்பப்பட்டது.தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு நடந்த விழா பந்தலில் இருந்த மேடையில் நடிகர் விஜய்யின் இயக்குநர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபனா மற்றும் பிரபல திரைப்பட உலகில் உள்ள பிரபலங்கள் ஆகியோர் அமர்ந்திருக்க, மேடையில் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் தளபதி விஜய், மாநாட்டு மைதானத்துக்கு சுமார் 4 மணி அளவில் வந்தார்.800 மீட்டர் நீளமுள்ள ரேம்பின் வழியே தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தபடியே தலைவர் தளபதி விஜய் நடந்து வந்தார்.இதனை தொடர்ந்து கை அசைத்தபடியே நடந்து வர அப்போது தொண்டர் ஒருவர் தலைவர் தளபதி விஜய் மீது கட்சித் துண்டை வீசிய தலைவர் தளபதி விஜய் அதை எடுத்து தன்னுடைய தோளில் அணிந்து கொண்டார். தொண்டர்கள் வீசிய அனைத்து துண்டுகளையும் தனது தோளில் அணிந்து கொண்டு மேடைக்கு வந்த தலைவர் தளபதி விஜய் தன் தோளில் இருந்த அனைத்து கட்சித் துண்டுகளையும் அங்கிருந்த டீபாயில் அடுக்கி  வைத்தார்.ஒரே ஒரு துண்டை மட்டும் தனது தோளில் அணிந்து கொண்டார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், அவர்கள் கண்கள் கலங்கியவாறு மாநாடு கூட்டத்தை உள்ள தொண்டர்களை பார்த்து  மிகவும் சந்தோஷமாக  கையசைத்தார்.அதன் பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதன் பிறகு மாலை 4.20 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி  கொடியை, மேடையில் இருந்தவாறே ‘ரிமோட்‘ பட்டனை அழுத்தி தலைவர் தளபதி விஜய் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் உறுதிமொழி வாசிக்கப்பட தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் உறுதி மொழியேற்றனர்.இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார்.இதனையடுத்து கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது.

இறுதியாக, கொள்கைகளை விளக்கி தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் தலைவர் தளபதி விஜய் பேசினார்.

‘ஒரு குழந்தை முதன் முதலாக ‘அம்மா‘ என அழைக்கும்போது, அம்மாவுக்கு சிலிர்ப்பு வரும் பால் மணம் மாறாத அந்த குழந்தைக்கு, அந்த உணர்வு குறித்து சொல்ல தெரியாது.

அந்த உணர்வுடன் நான் இங்கு நிற்கிறேன்.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்.

ஆனால், குழந்தைக்கு பயம் இருக்காது பாம்பைக் கையில் பிடித்து விளையாடும் அந்த பாம்புதான் அரசியல்.

அரசியலுக்கு நான் குழந்தைதான் பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதே என் நம்பிக்கை  அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது கவனமாகவே களமாட வேண்டும்.

நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார்.

ஆனால், அவர் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே நம் கொள்கை அடுத்து, நேர்மையான நிர்வாகம் தந்த காமராஜர், அரசியல் சாசனம் உருவாக்கிய அம்பேத்கர், வீரமிக்க பெண்களான வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள். இவர்கள் எல்லாம்தான் நம் கொள்கை தலைவர்கள்.

பிரிவினைவாத சித்தாந்தம் மட்டுமின்றி, ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும் கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும் கபடதாரிகள்தான் இப்போது ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு முடிவோடு வந்திருக்கிறேன் இனி பின்னோக்கிப் பார்க்க மாட்டேன் இது நான் மட்டும் எடுத்த முடிவல்ல  தொண்டர்களுடன் சேர்ந்து எடுத்த முடிவு எதற்கும் தயாராக இருக்கிறோம் ‘ஏ டீம், பி டீம்’ என்று பிரச்சாரம் செய்து எங்களை வீழ்த்திவிடலாம் என கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம்.

மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர்.

எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது.மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம்.

எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்கள்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள்.மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்.

இனி என்னை ‘கூத்தாடி கூத்தாடி’ என்று கூப்பாடுப் போடுவார்கள் எம்ஜிஆர், என்டிஆரை அப்படி கூப்பிட்டவர்கள்தான் அவர்கள் ஆனால், இன்றைக்கும் அந்த தலைவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவின் உச்சத்தை உதறிவிட்டு வந்துள்ளேன்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

மக்களோடு மக்களாக நாம் களத்தில் இருக்கப் போகிறோம்

2026 ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நம்மை தனிப்பெரும்பான்மையோடு மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்.

மக்கள் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும்.

நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார்.நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்.நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

error: Content is protected !!