தளபதி நடிகர் விஜய் நடிக்கும் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களுக்கு இயக்குநர் யார் தெரியுமா?
தளபதி நடிகர் விஜய் நடிக்கும் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களுக்கு இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை 11 ஆகஸ்ட் 2024 தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநடிகர்களில் வரிசையில் தளபதி நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் (தி கிடேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த தி கோட் திரைப்படம் வருகிற 2024 செப்டம்பர் 5ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கான பின்னணி வேலைகள் அனைத்தும் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே தளபதி நடிகர் விஜய் அரசியலில் இறங்குவதாக அறிவித்து தமிழ் திரைப்பட உலகையும் தமிழக மக்களையும் பரபரப்பாகி தமிழ வெற்றிக் கழகம் என்று தனது கட்சி 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நடஙவிஜய்யின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிப்பாரா? நடிக்க மாட்டாரா? என்பது தெளிவற்ற விஷயமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 69வது திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அது அரசியல் சார்ந்த கதையாகவே இருக்கும் என்று இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்து இருந்தார்.
அதன்படி தளபதி 69 திரைப்படம் அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இயக்குநர் ஹெச். வினோத், நடிகர் விஜய் இணையும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது
தெரியவில்லை.
அரசியல் அறிவிப்பு வெளியான நிலையிலும், நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தைத் தொடர்ந்து தளபதி 69 மற்றும் தளபதி 70 என இரண்டு திரைப்படங்களில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தற்போதைய தகவல்களில் தளபதி 69 திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படும் நிலையில், தளபதி 70 திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இருக்கலாம் என சமூக வலைத்தள பக்கங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.











