இன்றைய ராசிபலன்கள் 10/11/2024.
இன்றைய ராசிபலன்கள்
10-11-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.
10-11-2024 தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஐப்பசி 24
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ நவமி – Nov 09 10:45 PM – Nov 10 09:01 PM
சுக்ல பக்ஷ தசமி – Nov 10 09:01 PM – Nov 11 06:46 PM
நட்சத்திரம்
அவிட்டம் – Nov 09 11:47 AM – Nov 10 10:59 AM
சதயம் – Nov 10 10:59 AM – Nov 11 09:40 AM
கரணம்
பாலவம் – Nov 09 10:45 PM – Nov 10 09:57 AM
கௌலவம் – Nov 10 09:57 AM – Nov 10 09:01 PM
சைதுளை – Nov 10 09:01 PM – Nov 11 07:58 AM
யோகம்
துருவம் – Nov 10 04:23 AM – Nov 11 01:41 AM
வியாகாதம் – Nov 11 01:41 AM – Nov 11 10:36 PM
வாரம்
ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.
சூரியோதயம் – 6:14 AM
சூரியஸ்தமம் – 5:53 PM
சந்திரௌதயம் – Nov 10 1:29 PM
சந்திராஸ்தமனம் – Nov 11 1:39 AM
அசுபமான காலம்
இராகு – 4:26 PM – 5:53 PM
எமகண்டம் – 12:03 PM – 1:31 PM
குளிகை – 2:58 PM – 4:26 PM
துரமுஹுர்த்தம் – 04:20 PM – 05:06 PM
தியாஜ்யம் – 05:47 PM – 07:18 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:40 AM – 12:27 PM
அமிர்த காலம் – 02:51 AM – 04:22 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:38 AM – 05:26 AM
ஆனந்ததி யோகம்
மாதங்கம் Upto – 10:59 AM
ராக்ஷசம்
வாரசூலை
சூலம் – West
பரிகாரம் – வெல்லம்
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்
மாலை
03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
(10-11-2024) இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
அஸ்வினி : லாபகரமான நாள்.
பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.
கிருத்திகை : இழுபறியான நாள்.
ரிஷபம்
மற்றவர்களுடன் பேசும் பொழுது கவனம் வேண்டும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். திடீர் பயணங்கள் ஏற்படும். சக வியாபாரிகளால் சில மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : பொறுப்புகள் குறையும்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
மிதுனம்
எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பணி சார்ந்த முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். உறவுகளிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். அலுவலகப் பணிகளை பகிராமல் மேற்கொள்வது நல்லது. பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : செலவுகள் உண்டாகும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
கடகம்
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உயர் அதிகாரிகளால் மனதில் குழப்பம் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். வழக்கமான செயல்களிலும் கவனத்துடன் செயல்படவும். வியாபாரப் பணிகளில் சில மந்தமான சூழல் உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : சலசலப்புகள் மறையும்.
பூசம் : குழப்பம் உண்டாகும்.
ஆயில்யம் : மந்தமான நாள்.
சிம்மம்
சில முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தேவைக்கு உகந்த வரவுகள் கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு உயரும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான இழுபறியான வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். சகோதரிகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : வரவுகள் கிடைக்கும்.
பூரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
கன்னி
உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பல நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : சந்திப்புகள் ஏற்படும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சோர்வுகள் உண்டாகும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : மாற்றமான நாள்.
விருச்சிகம்
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் மத்தியில் ஆதரவு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசாகம் : அலைச்சல் ஏற்படும்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : ஆதரவு மேம்படும்.
தனுசு
தொழில் சம்பந்தப்பட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களை புரிந்து செயல்படுவார்கள். தடங்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
மூலம் : முயற்சிகள் ஈடேறும்.
பூராடம் : தீர்வுகள் பிறக்கும்.
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மனதில் புதிய பாதைகள் புலப்படும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சக பணியாளர்களின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : புரிதல் அதிகரிக்கும்.
சதயம் : தாமதம் உண்டாகும்.
பூரட்டாதி : லாபகரமான நாள்.
மீனம்
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். ஜாமீன் செயல்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். பயணங்களில் அலைபேசியை தவிர்க்கவும். வியாபார முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : சோர்வுகள் ஏற்படும்.
நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN.
+919942285750.




