இன்றைய ராசிபலன்கள் 06/08/2024
இன்றைய ராசிபலன்கள்.
ஆடி : 21 செவ்வாய் கிழமை.
ஆகஸ்ட் 06/08/2024.
மேஷம் -ராசி.
கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் அனுபவம் மேம்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
அஸ்வினி : ஈடுபாடு அதிகரிக்கும்.
பரணி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கிருத்திகை : அனுபவம் மேம்படும்.
ரிஷபம் – ராசி
மேல்நிலை கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். நிலம் மற்றும் வீடு விற்பனையில் பொறுமையை கையாளவும். தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.
ரோகிணி : பொறுமையை கையாளவும்.
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
மிதுனம்- ராசி.
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்.
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
கடகம் – ராசி.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலை ஏற்படும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனை விற்பது, வாங்குவது தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்.
புனர்பூசம் : கலகலப்பான நாள்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மதிப்புகள் மேம்படும்.
சிம்மம் – ராசி.
இனம்புரியாத சில கனவுகள் மூலம் அமைதியின்மை உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படும். புதுவிதமான பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.
மகம் : அமைதியின்மை உண்டாகும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : நன்மையான நாள்.
கன்னி – ராசி.
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். உணவு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் வெளிப்படும். தடைபட்ட பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். சாலை பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
துலாம் – ராசி.
சுப காரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : வாதங்களை தவிர்க்கவும்.
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம் – ராசி.
அரசியல்வாதிகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரப் பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றமான சூழல் நிலவும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். வருத்தம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : மாற்றமான நாள்.
கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.
தனுசு – ராசி.
வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உற்பத்தி தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சூழநிலைக்கு ஏற்ப செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.
மூலம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : ஒத்துழைப்பான நாள்.
உத்திராடம் : புரிதல் அதிகரிக்கும்.
மகரம் – ராசி.
எதிலும் பொறுமையுடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இனம்புரியாத ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.
கும்பம் – ராசி.
எதையும் சமாளிக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், தொடர்பும் ஏற்படும். புதுவிதமான பொருள் சேர்க்கை உண்டாகும். சாகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி துரிதம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
அவிட்டம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
சதயம் : அறிமுகம் ஏற்படும்.
பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.
மீனம் – ராசி.
உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : புரிதல் அதிகரிக்கும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.