’புஷ்பா 2 : தி ரூல்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீ லீலா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுகுமார்.
ஒளிப்பதிவாளர் :- மிரெஸ்லோவ் குபாப்ரோஜெக்.
படத்தொகுப்பாளர் :- நவின் நூலி.
இசையமைப்பாளர் :- தேவி ஸ்ரீ பிரசாத், சாம்.சி.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர்.
ரேட்டிங் :- 3.75./5.
செம்மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் கூலித்தொழிலாளியாக இருந்த கதாநாயகன் அல்லு அர்ஜுன், தனது தைரியம் மற்றும் அதிரடியால் செம்மரக் கடத்தல்காரர்கள் சிண்டிகேட்டின் தலைவராக அமர்ந்த கதாநாயகன் அல்லு அர்ஜுன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகத்தில், செம்மரக் கடத்தல் சிண்டிகேட்டின் தலைவன் என்பதையும் தாண்டி, தனக்கான ஒரு மிகப்பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கி புஷ்பா சொன்னால் அரசாங்கமே மாறும் அளவிற்கு வலம் வருகிறார்.
கதாநாயகன் அல்லு அர்ஜுனை எபப்டியாவது வீழ்த்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரியான பகத் பாசில் பல வழிகளில் திட்டம் தீட்ட, அதற்கு கதாநாயகன் அல்லு அர்ஜுன் தனது பண பலத்தால் பதிலடி கொடுக்கிறார்.
காவல்துறை மட்டும் இன்றி அரசியலும் தன்னுடைய பண பலத்தால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கதாநாயகன் அல்லு அர்ஜுனுக்கு ஆந்திர மாநில முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அப்போது அவரது மனைவி கதாநாயகி ராஷ்மிகா மந்தனா கதாநாயகன் அல்லு அர்ஜுன் முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும், அந்த புகைப்படத்தை வீட்டில் உள்ள ஹாலில் மாட்ட வேண்டும் என விருப்பப்படுகிறார்.
மனைவி கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஆசைப்படி முதல்வருடன் கதாநாயகன் அல்லு அர்ஜுன் புகைப்படம் எடுக்க நினைக்கும் போது, என்னதான் கட்சிக்கும், தனக்கும் பணத்தை வாரிக்கொடுத்தாலும், கதாநாயகன் அல்லு அர்ஜுன் புஷ்பா ஒரு கடத்தல்க்காரன் என்பதால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முதல்வர் மறுத்துவிடுகிறார்.
தன்னிடம் இதுவரை எதையும் கேட்காத தனது மனைவி கதாநாயகி ராஷ்மிகா மந்தனா ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் கதாநாயகன் அல்லு அர்ஜுன் தான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தயாராக இருப்பவரை ஆந்திர மாநில முதல்வர் இருக்கையில் உட்கார வைக்க முடிவு செய்கிறார்.
அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் கதாநாயகன் அல்லு அர்ஜுன், தான் சொல்லும் நபரை ஆந்திர மாநில முதல்வராக அமர வைக்க தேவையான பணத்திற்காக தனது செம்மரக் கடத்தல் வியாபாரத்தை சர்வதேச அளவில், தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான மிகப்பெரிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
கதாநாயகன் அல்லு அர்ஜுன் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லை வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ‘புஷ்பா 2 : தி ரூல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘புஷ்பா 2 : தி ரூல்’ திரைப்படத்தில கதாநாயகனாக அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் அல்லு அர்ஜுன் புஷ்பா கதாபாத்திரத்திற்காக உடல் மொழியுடன் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பெண் கதாபாத்திரத்தில், இடம்பெறும் நடனக் காட்சி மற்றும் சண்டைக்காட்சி இரண்டும் அவரது ரசிகர்களையும், புஷ்பாவை காண வந்த ரசிகர்களையும் கொண்டாட வைத்துவிட்டார்.
நடை உடை மற்றும் ஸ்டைல், மாஸ், ஆக்ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கும் கதாநாயகன் அல்லு அர்ஜுன் செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இந்த ‘புஷ்பா 2 : தி ரூல்’ திரைப்படத்தில கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, கதாநாயகன் அல்லு அர்ஜுனுக்கு மனைவியான பிறகு பெரியதாக வேலை இருக்காது என நினைத்தால், கதாநாயகன் அல்லு அர்ஜுனுக்காக அவர் பேசும் வசனங்கள் மற்றும் கதாநாயகன் அல்லு அர்ஜுனுடன் மூட் கெமிஸ்ட்ரி ஆகியவை மூலம் தனது திரை இருப்பை அருமையாக அற்புதமாக நிரூபித்திருக்கிறார்.
புஷ்பா முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அடாவடித்தனம் செய்த பகத் பாசில், இந்த இரண்டாம் பாகத்திலும் அட்ராசிட்டியோடு அறிமுகமாகி நடிப்பில் மிகப்பெரிய அளவில் அசத்தி இருக்கிறார்.
அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராவ் ரமேஷ், முதல் பாகத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷ்யா பரத்வாஜ் ஆகியோர் முதல் பாகம் இரண்டாம் பாகத்தில் மட்டுமல்லாமல் மூன்றாம் பாகத்திலும் பயணிக்கும் வகையில் இவர்களுடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தொகுப்பாளர் நவின் நூலியின் படத்தொகுப்பு காட்சிகள் அனைத்தும் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றாலும் 3 மணி நேரம் 20 நிமிடம் என்ற திரைப்படத்தின் அதிகப்படியான நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் மிரோஷ்லவ் புரோன்ஷெக்கின் ஒளிப்பதிவு மூலம் அனைத்துக் காட்சிகளையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைப்பது போல் இருந்தாலும், முதல் பாகத்தில் உள்ள அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசை விறுவிறுப்புக்கு ஏற்றவாறு மிக அருமையாக அமைந்திருக்கிறது.
இயக்குநர் சுகுமார், புஷ்பா என்ற செம்மர மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் சாதாரண
கூலித்தொழிலாளியை செம்மரக் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக உருவெடுப்பது மட்டுமல்லாமல் தனியாக ஒரு ராஜ்ஜியம் செய்ததோடு, அவரது அடுத்த நிலைகளைக் கொண்டு புஷ்பா சிண்டிகேட்டின் தலைவனாகவும் இந்த இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி இருந்தாலும், அவரது மனைவி செண்டிமெண்ட் மற்றும் தந்தை பெயரை பயன்படுத்த முடியவில்லையை எனற சோகம் இரண்டையும் சேர்த்து மிகவும் அழுத்தமாக திரைக்கதையும்
திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் ஃபயர் மட்டும் அல்ல காட்டுத் தீயாக பரவி இருக்கிறது.











