புஷ்பா திரை விமர்சனம் ரேட்டிங் –2.5 /5

நடிகர் நடிகைகள் – அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில், அஜய் கோஸ், அஜய், ராவ் ரமேஷ், மைம் கோபி, சுனில், தனஜெயா, அனுசுயா பரத்வாஜ், மற்றும் பலர்.
இயக்கம் – சுகுமார்
ஒளிப்பதிவு – மிரோஸ்லா குபா ப்ரோசேக்.
.
படத்தொகுப்பு – கார்த்திகா ஸ்ரீனிவாஸ், ரூபன்.
இசை – தேவிஸ்ரீபிரசாத்.
தயாரிப்பு – மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
ரேட்டிங் –2.5 /5
காடுகளை மையமாக வைத்து அதிகமான திரைப்படங்கள் வந்ததில்லை.
அதற்காக நிறைய உழைக்க வேண்டும்.
படப்பிடிப்பு நடக்கும் போது இயற்கையான பல பிரச்சினைகள் வரும்.
மழை, வெயில், இருட்டு, பூச்சிகள் என பல விஷயங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் மீறி காடுகளை மையமாக வைத்து வந்த திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
செம்மரக்கட்டை விளையும் காட்டுப்பகுதியில் வைத்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுகுமார்.
செம்மரக் கடத்தல் அதிகம் நடைபெறும் சித்தூர் பகுதி, சேஷாசலம் காடுகளில் நடக்கும் கதை என திரைப்படத்தின் பின்னணியை அமைத்திருக்கிறார்கள்.
செம்மரக் கடத்தல் கும்பல் தலைவரான அஜய் கோஷ்யுடன் வேலை செய்கிறார் கதாநாயகன் அல்லு அர்ஜுன்.
அங்கு செம்மரக் கடத்தலில் சாதாரண கூலியாக தான் வேலைக்குச் சேர்கிறார் கதாநாயகன் அல்லு அர்ஜுன்
செம்மரங்களை காவல்துறையினருக்கு தெரியாமல் மிக தைரியமாக கடத்திச் செல்லும் கதாநாயகன் அல்லு அர்ஜுனுக்கு இருப்பதால், அவருக்கு பொறுப்புகளையும் பணத்தையும் கொடுக்கிறார் அஜய் கோஷ்.
ஒரு கட்டத்தில் அல்லு அர்ஜுனை பார்ட்னராகவும் சேர்த்துக் கொள்கிறார் அஜய் கோஷ்.
படிப்படியாக உயர்ந்து கமிஷனுக்கு வேலை செய்ய ஆரம்பித்து, சிண்டிகேட்டை மீறி சென்னை ஏஜென்ட்டுக்கே மரத்தை அனுப்புகிறார்.
பின்னர் சிண்டிகேட்டின் தலைமைப் பதவிக்கும் வருகிறார்.
யாரும் அசைக்க முடியாதவராக அடங்காதவனாக இருக்கும் கதாநாயகன் அல்லு அர்ஜுன்.
இதன் பிறகு அஜய் கோஷின் இன்னொரு பார்ட்னரான சுனிலால், அல்லு அர்ஜுனுக்கு சிக்கல் வருகிறது.
இறுதியில், அந்த சிக்கலை அல்லு அர்ஜுன் எப்படி சமாளித்தார்? என்பதுதான் புஷ்பா திரைப்படத்தின் மீதிக்கதை.
புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் திரைப்படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார் கதாநாயகன் அல்லு அர்ஜுன்.
புஷ்பாராஜ் கதாபாத்திரத்திற்காக தன்னை நிறையவே மாற்றிக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் அல்லு அர்ஜுன்.
இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அருமையாக நடித்திருக்கிறார்.
நடை, உடை, பாவனை, உடல்மொழி என அனைத்திலும் புஷ்பா என்கிற புஷ்பராஜ்தான் கண்ணுக்குத் தெரிகிறார்.
வித்தியாசமான தமிழுடன், பொருத்தமான குரலுடன் அல்லுவிற்கான டப்பிங் அமைந்து ரசிக்க வைக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளில் தனி அவதாரம் எடுத்திருக்கிறார் அல்லு. ‘புஷ்பான்னா பிளவர் இல்ல, பயர்” என்கிறார்.
தோளை ஒரு பக்கமாகச் சாய்த்து நடக்கும் மேனரிசம், பன்ச் வசனங்கள், தைரியம் என நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார். நடனக் காட்சிகள், ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவற்றில் கவனிக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
மற்றொரு பக்கம் பாடல் காட்சியில் வந்து அசத்தி இருக்கிறார் சமந்தா.
அஜய் கோஷ் மற்றும் சுனில் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.
வழக்கமான கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுகுமார்.
ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம், ரசிகர்களுக்கு ஏற்ற கமர்சியல் கலந்து கொடுத்து இயக்கி இருக்கிறார். 2ஆம் பாகம் இருப்பதால் வேண்டுமென்றே திரைக்கதையின் நீளத்தை வைத்ததுபோல் இருக்கிறது.
கேங்க்ஸ்டர் திரைப்படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார் மிரோஸ்லா கூபா.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘புஷ்பா’ திரைப்படம் அதிக சத்தத்துடன் உள்ள சரவெடி










