Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு !!
Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு !!சென்னை 01 மார்ச் 2025 YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.
எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம், கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில்,…
நாம் நம்முடைய மனைவிக்கு லவ் யூ என்று சொல்கிறோமோ… இல்லையோ.. ‘ஸ்வீட் ஹார்ட் ‘என்று சொல்லாமல் கடக்க முடியாது.
ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி அண்ணன் , ” ஏண்டா அந்த கேள்வியை என்ன பார்த்து கேட்ட?’ என ஒரு டயலாக் பேசுவார்.
இந்த படத்தில் நான் ஒரு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறேன்.
கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது என சொல்வார்கள்.
அவருடைய பயணம் இனி வெற்றி தான்.
பொதுவாக காதலை சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா.. ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் பாடல்களை சொல்லித்தான் காதலைச் சொல்வார்கள்.
இதற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில்,…
படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் இளன் பேசுகையில்,…
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பொன் ராம் பேசுகையில்,…
ஆனால் அவருடன் பத்து நிமிடம் பழகியவுடன் அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என்பதை தெரிந்து கொண்டேன்.
ரியோ நன்றாக நடிக்கிறார்.
ஏனெனில் பி & சி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். அவர்களுக்காக ஒரு படத்தில் நடித்தால் உங்கள் வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்.
திரையில் ரியோவுக்கும், கோபிகாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.
இது இளம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
இந்தப் படத்தில் இருக்கும் ‘கிஸா’ சாங் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படம் ஸ்யூர் ஹிட். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
புது இயக்குநர்களுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பளிப்பதை நான் வரவேற்கிறேன்.
இதற்காகவும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில்,…
இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த படம் வெளியான பிறகு படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நிறைய ரசிகர்களைக் கவரும்.
அந்தப் பாடல் இந்த படத்தில் இடம் பிடித்திருக்கிறது ” என்றார்.
இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில்,…
சிரித்து சிரித்து வயிறு புண்ணானது.
அவர் அனைவருக்கும் மரியாதை அளிப்பவர்.
இப்படி ஒரு இளம் குழுவினரை அறிமுகப்படுத்தும் யுவன் சங்கர் ராஜாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும்.
என் முதல் ஹீரோ ரியோ ராஜ். ஸ்வீட்ஹார்ட் படத்தைப் பற்றி தொடர்ந்து நல்ல விதமாக கேள்விப்படுகிறேன்.
அவருக்கும் இந்த படம் பெரிய வெற்றியை வழங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.
இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் பேசுகையில்,…
முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஜோ’ படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன்.
இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசியா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரஞ்சி பணிக்கர், ரிது , கவிதா, மைதிலி, காயத்ரி, காத்தாடி ராமமூர்த்தி, துளசி மேடம் என இப்படத்தில் நடித்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம்.
இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 வது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர்.
இந்த படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கேரக்டர் திரையில் தோன்றும். அவரும் அதை புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். ” என்றார்.
நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில்,…
இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் பெண்ணாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நன்றி.
மலையாளத்தில் உள்ளவர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் ஃபேவரிட். எங்கள் வாழ்க்கையில் வலிகளை மறக்கச் செய்தவர் யுவன்.
அவர் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
மனு என்ற கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஒரு வருடத்தில் படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
ரியோ ராஜ் திறமையானவர்.
இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் மார்ச் 14ஆம் தேதி அன்று வெளியாகிறது.
அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’: என்றார்.
நடிகர் ரியோ ராஜ் பேசுகையில்,…
அனைவருக்கும் யுவனை மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அவரை பிடிக்கும்.
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவருடைய இசையை எட்டாவது படிக்கும் போது கேட்டு ரசித்தேன்.
இதற்காக அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வீட்ஹார்ட் மார்ச் 14ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இது ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா.
யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம்.
இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார்.
அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். ‘இவர் என் மாணவர்’ என பெருமையாக சொல்வேன்.
இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்தில் பணியாற்றி நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஸ்வீட்ஹார்ட்’ அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிராண்ட் அம்பாசிடராக நடித்திருக்கிறார்.
அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,…
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால்.. முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம்.
Related posts:
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !!
இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு !
நடிகர் சிலம்பரசன் டி. ஆர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்து ‘நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர் !!
நிதின்சத்யா நாயகனாக கலக்கும் “கொடுவா” படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் !!!
தனது புதிய திரைப்படத்திற்கு முதல்முறையாக யுவன் சங்கர் ராஜா இல்லாமல் வேறு இசையமைப்பாளருடன் கைகோர்க்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன் இயக்கத்தில் “நதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !
“நினைவெல்லாம் நீயடா” படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடலை டைரக்டர் பா. ரஞ்சித், வெளியிட்டனர்!!
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் இளைய ஞானி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா !!
யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர்.யை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தும் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார்.!

