எனது அண்ணன் டி ராஜேந்தர் பாடிய ஒரு எனர்ஜியான பாடலுக்கு என்னை நடனமாட வைத்து விட்டார்கள் இளைய திலகம் பிரபு.

எனது அண்ணன் டி ராஜேந்தர் பாடிய ஒரு எனர்ஜியான பாடலுக்கு என்னை நடனமாட வைத்து விட்டார்கள் இளைய திலகம் பிரபு.

சென்னை 24 மே 2025 அறிமுக இயக்குனர் மகாகந்தன் இயக்கத்தில் கதையின் நாயகனாக வெற்றி இளைய திலகம் பிரபு கோமல் குமார் ஆகியோர் நடித்துள்ள இந்த ராஜபுத்திரன் திரைப்படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.

தமிழ் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய இளைய திலகம் பிரபு…

இதுவரை தமிழ் திரைப்பட உலகில் 74புதுமுக இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து விட்டேன்.

இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறேன்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் வெற்றியின் தந்தையாக நடிக்கிறேன்.

திரைப்படத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள் எனக்கும் அவர்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் எனது அண்ணன் டி ராஜேந்தர் அவர்கள் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

ரொம்ப எனர்ஜியான பாடல் இந்தப் பாடலுக்கு என்ன ஆட சொன்னார்கள் நான் ஆடமாட்டேன் என்றேன்.

ஆனால் என்னை ஆடை வைத்து விட்டார்கள்.

இன்றைய இயக்குனர்களிடம் நிறைய திறமை இருக்கிறது.

கதாநாயகி கிருஷ்ண பிரியா நன்றாக நடித்திருக்கிறார்.

கதைப்படி எனக்கும் அவருக்கும் தான் மோதல் இருந்து கொண்டே இருக்கும் படப் பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது.

அங்குள்ள கிராமத்து மக்கள் அப்பா மீதும் என் மீதும் என் மகன் மீதும் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்

என்னை வைத்து திரைப்படம் இயக்கிய ஆர். வி. உதயகுமார் ஜி எம் குமார் ஆகியோருடன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.

பல இயக்குனர்கள் காமெடியனாக குணசத்திர நடிகர்களாக மாறிவிட்டார்கள்.

மே மாதம் 30 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.

அனைவரும் ரசிக்கும் படி உள்ள திரைப்படமாக இருக்கும் நிச்சயம் பாருங்கள் என்றார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்…

அடுத்த தமிழ்நாட்டை ஒரு நடிகன் தான் ஆளப்போகிறான் என போகிற போக்கில் ஒரு வெடியை போட்டுவிட்டு போனார்.

அவர் மேலும் கூறும்போது மக்கள் கையில் காசு இல்லாதது மிகப்பெரிய குறை எந்த ஆட்சி வந்தாலும் சரி அடுத்த விஜய் வருகிறாரா ஓட்டு போடுகிற எல்லாம் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் பிக்சட் டெபாசிட்டில் போடுவேன் அதை வைத்து நீங்கள் வியாபாரம் பண்ணுங்கள் அதுக்கு வரி இல்லை என்று தேர்தல் அறிக்கை விட வேண்டும் அப்படி செய்தால் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றார்

இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, கே ஆர், இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் வசந்த், நந்தா பெரியசாமி பேரரசு நடிகர் ஆரி மற்றும் பலர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தார்கள்

error: Content is protected !!