புரட்சித்தலைவர் நடிகர் திலகம் சூப்பர் ஸ்டார் ஆகிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இ.வி. ராஜன் காலமானார்.

சென்னை 12 அக்டோபர் 2022 புரட்சித்தலைவர் நடிகர் திலகம் சூப்பர் ஸ்டார் ஆகிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இ.வி. ராஜன் காலமானார்.

வசூலில் அடித்து நொறுக்கும் வகையில் அந்த காலத்திலேயே சிறந்த திரைப்படங்களை எடுத்தவர் தயாரிப்பாளர் இ.வி. ராஜன்.

அந்த காலத்தில் எந்த ஒரு டெக்னலாஜியும் பெரிதாக
இல்லாமல் சிறப்பான காட்சிகளை வெளிப்படுத்திய பல திரைப்படங்கள் உள்ளன.

அது போன்ற திரைப்படங்களை அந்த காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த தயாரிப்பாளர்களில் ஒருவர்தான், தயாரிப்பாளர் இ.வி. ராஜன்.

இவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான” குமரிப் பெண்” நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து” வெளியான தங்கச்சுரங்கம்” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ” வெளியான குப்பத்து ராஜா” ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்து ” வெளியான கல்யாண கச்சேரி” மற்றும் ” சட்டம் சிரிக்கிறது” உள்ளிட்ட சுமார் 15 திரைப்படங்களை தன்னுடைய இ.வி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்தவர்.

இவர் கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில்,

இ.வி. ராஜன் இன்று இயற்கை எய்தினார்.

இவருக்கு வயது 83 வயதாகும்.

இவர் பிரபல திரை நட்சத்திரம் ஈ.வி.சரோஜாவின் சகோதரராவார்.

பிரபல இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் மைத்துனராவார்.

பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் தற்போது இவருடைய உடல் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது இறுதி சடங்கு நாளை மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி.
3/ 543 ராஜா தெரு
லட்சுமண பெருமாள் நகர்,
கொட்டிவாக்கம்
சென்னை 600041

தொடர்புக்கு
கணேஷ்ராமண்ணா
(மருமகன்)
9840192627.

error: Content is protected !!