தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கோரிக்கையை ஏற்று பொழுதுபோக்கு வரியை குறைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் வேண்டுகோளை ஏற்று திரைப்படங்கள் மீதான உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை (Local Body Entertainment Tax) எட்டு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக குறைத்ததற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் திரைப்பட வர்த்தக சபை தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை குறைக்க வேண்டும் என்பது தமிழ் திரையுலகின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இதை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றது.
இதை கனிவுடன் பரிசீலித்து உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை எட்டு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக குறைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு மு. பெ. சாமிநாதன் அவர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவு தமிழ் திரையுலகுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. இதனால் தமிழ் சினிமா இன்னும் வளர்ச்சி அடையும் மற்றும் வலுவடையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனவே, மீண்டும் ஒருமுறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ் திரையுலகின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.











