பண்டோரா உலகிற்கும் மீண்டும் திரும்ப ஒரு வாரமே உள்ளது!
பண்டோரா உலகிற்கும் மீண்டும் திரும்ப ஒரு வாரமே உள்ளது!சென்னை 26 செப்டம்பர் 2025 பண்ரோராவின் உலகிற்கு மீண்டும் செல்ல இன்னும் ஏழு நாட்களே உள்ளது.
இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அக்டோபர் 2, 2025 அன்று பிரம்மாண்டமாக 3டியில் (1 வாரத்திற்கு மட்டும்) திரையரங்குகளில் வெளியாகிறது.
டிசம்பர் 19 அன்று வெளியாக இருக்கும் ’அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இதன் முந்திய பாகமான ஆஸ்கார் விருது வென்ற ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் காணத் தயாராகுங்கள். டிசம்பர் 2022 இல் வெளியான இந்தத் திரைப்படம், உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்தது. நீருக்கடியில் பண்டோராவின் உலகத்தை சிறப்பான முறையில் கொண்டு வந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக இந்தத் திரைப்படம் அகாடமி விருது வென்றது.
சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, சிகோர்னி வீவர், கேட் வின்ஸ்லெட் மற்றும் ஸ்டீபன் லாங் ஆகியோருடன் சல்லி குடும்பத்தின் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் மீண்டும் ஒருமுறை பாருங்கள்.
20த் சென்ச்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா, ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை அமெரிக்க மறுவெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே, அக்டோபர் 2, 2025 அன்று இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் 3Dயில் (1 வாரத்திற்கு மட்டும்) வெளியிடுகிறது.
Related posts:
20th Century Studios வழங்கும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் 16 டிசம்பர், 2022 இந்தியாவில் வெளியாகிறது!
அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் வெளியாகி முன்று நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளது.!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!
நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள ‘ஆல்பா’ திரைப்படம் டிசம்பர் 25,2025- கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது!
“ஆட்டோஃகிராப்” திரைப்படம் 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. !
திரைப்பட படப்பிடிப்பை நடத்திக்கொள்ளத் தந்த அனுமதி எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றது போல் உள்ளது தமிழக முதல்வர்களுக்கு TFAPA சார்பாக மனமார்ந்த நன்றி.!
நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!!
தென்னிந்திய திரைப்படம் டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் 08 ஜூன் 2025 ஞாயிறு கிழமை அன்று நடைபெற்ற உள்ளது!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான டீசருடன் சுகுமார் & குழு தயாராக உள்ளது !!

