இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!சென்னை 26 செப்டம்பர் 2025 அக்டோபர் 2, 2025 அன்று இந்தியத் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) மீண்டும் வெளியாக இருக்கும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்துடன் தற்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரையும் கண்டு மகிழுங்கள்!இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் வரவேற்பு பெற்ற சினிமாட்டிக் உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது.
இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) வெளியாகிறது.
‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் மூலம் மரைன் ஆக மாறிய நவி தலைவர் ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நவி போர்வீரன் நெய்திரி (ஸோ சல்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகச பயணமாக பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அழைத்துச் செல்கிறார்.
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் ரீ-ரிலீஸ் மற்றும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் வெளியீடு என இந்த வருடம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.
20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா வரும் டிசம்பர் 19, 2025 அன்று ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.
Related posts:
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!
20th Century Studios வழங்கும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் 16 டிசம்பர், 2022 இந்தியாவில் வெளியாகிறது!
அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் வெளியாகி முன்று நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளது.!
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் ‘ஜூடோபியா 2’ திரைப்படத்தின் புதிய டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது!
நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்ன் அடுத்த புதிய பரிமாணம் – “எடிட்டிங் கலை” பயிற்சி இனிய தொடக்கம்.
நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்ன் அடுத்த புதிய பரிமாணம் “எடிட்டிங் கலை” பயிற்சி இனிய தொடக்கம்
கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான நடிகரான ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்!
உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் ‘அவதார் 2’ .!
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!
‘ஃபயர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் திரையரங்குகள், காட்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு !

