1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படங்களில் நடிகர் அல்லு அர்ஜுன்!

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படங்களில் நடிகர் அல்லு அர்ஜுன்!

சென்னை 29 டிசம்பர் 2025 தமிழ்த் திரைப்பட உலகில் தொடர்ந்து நான்கு  வெற்றிப் திரைப்படங்களைக் கொடுத்த  இயக்குனர் அட்லீ, இந்தித் திரைப்பட உலகிலும்  வெற்றிக் கொடி நாட்டினார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து இயக்குனர் அட்லீ, அவர்கள் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் வசூல் மழை பொழிந்தது.

இப்போது நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களை வைத்து, தெலுங்கு திரைப்படம் இயக்கி தெலுங்கு திரைப்பட உலகிலும் இயக்குனர் அட்லீ, தடம் பதிக்கிறார்.

நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களை வைத்து இயக்கும் திரைப்படத்தின், கதை சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதையடுத்து அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது புராண திரைப்படம் திரைப்படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய்.

அல்லு அர்ஜுன் – திரிவிக்ரம் கூட்டணி இதற்கு முன் 4 திரைப்படங்களில் இணைந்துள்ளது.

இவர்களின் ‘அலா வைகுந்தபுரமுலூ’ தென்னிந்தியா முழுவதும் நல்ல வசூலைக் கொட்டியது.

இயக்குனர் அட்லீ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

2027 ஆம் ஆண்டு திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது, தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றிய திரைப்படம். ஆரம்பத்தில் இதன் கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

திரைப்படத்தின் கதாநாயகி மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த  அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

error: Content is protected !!