ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers) நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas ) உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
தனித்துவமான ஸ்டைல், மின்னல் வேக நடனங்கள், மாஸ் ஆக்ஷன் மற்றும் வலுவான திரை நடிப்பு என பான்-இந்தியா ஸ்டார்டம் கொண்ட அல்லு அர்ஜுன், தனித்துவமான கதை சொல்லல் மற்றும் மாறுபட்ட மாடர்ன் மேக்கிங் மூலம் கமெர்ஷியல் சினிமாவை மறுவரையறை செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் — இந்த கூட்டணி தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் (இதுவரை காணாத வேடத்தில்) நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.
Related posts:
‘ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன்- இயக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ்- கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா !!
குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ்- இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது !!
ரெபல் ஸ்டார்’ பிரபாஸ்- இயக்குநர் ஹனு ராகவபுடி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது !
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தெலுங்கு மாநிலங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்!
மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!
மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் ⁉*
ராஜ்கமல் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் உலக நாயகன் கமல் ஹாசன் 232. இயக்கும் லோகேஷ் கனகராஜ் அனிருத் மெகா கூட்டணி.

