பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் சார்பில் உருவான படங்களுக்காக விருதுகள் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் சார்பில் உருவான படங்களுக்காக விருதுகள் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!சென்னை 30 ஜனவரி 2026 தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகையர்கள் மற்றும் நுட்பக் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் ‛தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’களை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் (Potential Studios) சார்பில் உருவான திரைப்படங்களுக்காக விருதுகள் பெற்ற அனைத்து நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எங்களின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விருது பெற்ற ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பின்னால் பலநூறு கலைஞர்களின் கூட்டு முயற்சி இருப்பதையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
2016 – மாநகரம் சிறந்த படம் – முதல் பரிசு
சிறந்த இயக்குனர் – லோகேஷ் கனகராஜ்
சிறந்த தையற் கலைஞர் – பி. செல்வம்
2019 – மான்ஸ்டர் சிறந்த நகைச்சுவை நடிகர் – கருணாகரன்
2022 – டாணாக்காரன் சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு
சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு
சிறந்த குணச்சித்திர நடிகர் – போஸ் வெங்கட்
மாநகரம், மான்ஸ்டர், மற்றும் டாணாக்காரன் ஆகிய திரைப்படங்களுக்காக விருது பெற்றவர்கள் மற்றும் படத்தில் பங்காற்றிய நடிகர் -நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு அரசு, விருதுகள் தேர்வுக் குழு, மற்றும் தமிழ்த் திரையுலகை தொடர்ந்து ஆதரித்து வரும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுடன்,
தயாரிப்பாளர்கள் பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத், R.தங்க பிரபாகரன்
Related posts:
திரையரங்குகளை நவம்பர் 10ம் தேதி திறக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு சங்கத்தின் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் டி. ராஜேந்தர்
பிளஸ்+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் புரட்சி தளபதி விஷால்.!
திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் திரை உலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்ததற்கு தமிழக முதல்வர் டி.ஜி.பி அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர்.
தமிழ திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. முரளி ராமசாமி மற்றும் அணிக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.!!
தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள மாலதி லக்ஷ்மண் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் !
திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. !
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கோரிக்கையை ஏற்று பொழுதுபோக்கு வரியை குறைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
மகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டிய திருவிழா நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019
தேசிய விருது பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இயக்குநர் பாரதிராஜா

