இயக்குனர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில்  போட்டியிடுகிறார்!!

இயக்குனர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில்  போட்டியிடுகிறார்!!

சென்னை 28 மார்ச் 2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏசி சண்முகம் அவர்களின் “புதிய நீதி கட்சி”  இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதியில் மதுரை மத்திய தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான சுந்தர்.சி அவர்கள் வேட்பாளராக களம் இறங்கும் நிலையில்  இயக்குனர் சுந்தர் சி அவர்கள் இரட்டை இலை சின்னத்தில்   போட்டியிடுகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

“புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் மற்றும் இயக்குனர் சுந்தர் சியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மற்றொரு தொகுதிக்கான வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும், அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என புதிய நீதிக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுந்தர் சி யின் மனைவியான நடிகை குஷ்பு பாஜக வில் முக்கிய பிரமுகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் எப்போது வேண்டுமானாலும் பாராளுமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்படலாம் என  கூறப்படுகிறது.

error: Content is protected !!