“ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் நடிகர் சுந்தர் C

சென்னை 21 ஜனவரி 2022 “ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் நடிகர் சுந்தர் C.

24 HRS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் படம் “ஒன் 2 ஒன்”.

சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கின்றார்.

விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சுந்தர் C பிறந்த நாளை முன்னிட்டு ஒன் 2 ஒன் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சுந்தர் C கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்து கூறிய அனைருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் C கொண்டாடியது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார்.

சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.