இயக்குநர் கணேஷ் மூர்த்தி இயக்கத்தில் ‘தமிழினி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !!
இயக்குநர் கணேஷ் மூர்த்தி இயக்கத்தில் ‘தமிழினி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !!இந்த திரைப்படத்தில் “தலைவன் தலைவி” புகழ் தீபா சங்கர், திருப்பாச்சி பெஞ்சமின், சத்ரியன் படத்தில் நடித்த வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சன் மியூசிக் தொகுப்பாளரும், பிரபல YouTuber-உம் ஆன VJ ஆசிக் ஒரு கதாநாயகனாகவும், “ராயல் சல்யூட்” படத்தில் நடித்த பிரதீப் ராஜ் மற்றொரு கதாநாயகனாகவும் நடிக்கின்றனர்.
கதாநாயகிகளாக “ரத்னம்”, “டீசல்” படத்தில் நடித்த ஷாஷா சிவகுமார் மற்றும் “அன்பெனும் ஆயுதம்” வெப்சீரிஸ் புகழ் புஷ்ப லதா நடித்துள்ளனர். மேலும் தயாரிப்பாளர் D. P. சரவணனும் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“பனையேறி” குறும்படத்தின் மூலம் தென் மாவட்ட பனையேறும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த இந்த படக்குழு, “தமிழினி” திரைப்படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கியுள்ளது. இப்படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை இயக்குநர் கணேஷ் மூர்த்தி மற்றும் தேவா இணைந்து எழுதியுள்ளனர். கணேஷ் மூர்த்தி இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சந்தோஷ் பாலாஜி இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் G. V. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ஒரு மென்மையான காதல் பாடலை பாடியுள்ளனர். மேலும் சிவாங்கி, சந்தோஷ் பாலாஜி மற்றும் சம் விஷால் ஆகியோரும் பாடல்கள் பாடியுள்ளனர்.
ஒளிப்பதிவை Scene No.62 பட புகழ் விஜய் வெங்கட் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பை இயக்குநர் கணேஷ் மூர்த்தியே செய்துள்ளார்.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், “தமிழினி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் பட்டியல் (Cast)
* தீபா சங்கர்
* VJ ஆசிக்
* பிரதீப் ராஜ்
* வின்சென்ட் ராய்
* திருப்பாச்சி பெஞ்சமின்
* ஷாஷா சிவகுமார்
* S. புஷ்ப லதா
* D. P. சரவணன்
தொழில்நுட்பக் குழு (Technical Crew)
தயாரிப்பு நிறுவனம்
SABARI CINE ENTERTAINMENT
தயாரிப்பாளர்கள்
D. P. சரவணன்
விஜிலா சரவணன்
இயக்குநர்
கணேஷ் மூர்த்தி
இணை தயாரிப்பாளர்கள்
மும்பை கணேசன்
செங்குளம் கணேசன்
கதை & வசனம்
தேவா
கணேஷ் மூர்த்தி
இசை
சந்தோஷ் பாலாஜி
ஒளிப்பதிவு
விஜய் வெங்கட்
படத்தொகுப்பு
கணேஷ் மூர்த்தி
ஒலிப்பதிவு (Audiography)
சுக வேந்தன் V.P
ஸ்டண்ட் இயக்கம்
எழில் வேந்தன்
பாடகர்கள்
G. V. பிரகாஷ் குமார்
சைந்தவி
சிவாங்கி
சந்தோஷ் பாலாஜி
சம் விஷால்
காஷ்டியும் டிசைனர் (Costume Designer)
ஏஞ்சல் லாரன்ஸ்
சுபாஷினி
VFX கிரியேட்டிவ் ஹெட்
ஸ்ரீராம் செந்தில்குமார்
DI Head
பரத் சிவராஜன்
Colourist
பரணிதர்
Assistant Colourist
A. அஜீத்குமார்
மேக்கப்
நிர்மலா மகாலிங்கம்
பாடல்வரிகள்
ஹசிம்
வைரபாரதி
மாதேஷ் சூர்யகுமார்
PRO
ஸ்ரீ வெங்கடேஷ்
Publicity Designer
G. தினேஷ் குமார்
Related posts:
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.
இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில், “டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது!
விக்ரமின் 58வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் M.சசிகுமார் நடிக்கும் “ஃபிரீடம் ஆகஸ்ட் 14” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது !!
வெண்ணிலா கபடி குழு 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.
இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !
சிவகார்த்திகேயனின் 16வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

