நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் எஸ். சத்யேந்திரா காலமானார் !!
நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் எஸ். சத்யேந்திரா காலமானார் !!
சென்னை 28 மே 2026 நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகரான எஸ். சத்யேந்திரா (S. Sathyendra), தமிழ், கன்னடம் மற்றும் பல்வேறு மொழிப் நிரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
சமூக வலைதளங்களில் துணிச்சலான திரை விமர்சனங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், உடல்நலக் குறைவால் மே சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 28 தேதி அன்று 2026 காலை 10 மணி அளவில் காலமானார்.
பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட எஸ். சத்யேந்திரா
கடந்த 40 ஆண்டு காலமாக திரைப்படத் துறையில் நடிகராக வலம் வந்தவர்.
ஏழாவது மனிதன், மண்வாசனை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு 18 வயசு திரைப்படத்தில் எஸ். சத்யேந்திரா வில்லனாகவும் நடித்துள்ளார்.
நடிகர் எஸ். சத்யேந்திரா 200க்கும் மேற்பட்ட தமிழ் கன்னட திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றி இருக்கிறார்.
மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் எஸ். சத்யேந்திரா நடித்திருக்கிறார்.
எடிட்டர் லெனின் இயக்கி தேசிய விருதினை பெற்ற ‘நாக் அவுட்’ குறும்படத்தில் இறந்து கிடக்கும் குத்துசண்டை வீரனாக நடித்து
இந்த காட்சி மூலம் திரையுலகில் பரவலாக அறியப்பட்டார்.
எந்த ஊரிலும் கோவா, திருவனந்தபுரம் நடைப்பெறும் அனைத்து திரைப்பட விழாக்களில் கலந்து கலந்து கொள்வதே வழக்கமாக வைத்திருந்தார்.
20 மொழிகள் பேச தெரிந்த எஸ். சத்யேந்திரா திரைப்பட உலகில் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் அடித்த ‘லியோ’ திரைப்படத்தின் விமர்சனம் மூலம் கவனிக்கப்பட்ட எஸ். சத்யேந்திரா ஒரு சில யூ-டியூப்களில் இவரது விமர்சனமும், நேர்காணலும் இடம் பெற்று இருக்கிறது.
திரைப்படத்துறை, கலை, மொழி சாந்த விஷயங்களில் தனித்துவம் மிக்கவராக பார்க்கப்பட்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் எஸ். சத்யேந்திரா
நேற்று காலமானார்.
நடிகர் எஸ். சத்யேந்திராவிற்கு திருமணம் ஆகவில்லை. உறவினர்கள் பெங்களூரில் இருப்பதாக தகவல்.
இவரின் மரணத்திற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.











