சாதனை நாயகன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு ஸ்ரீ தேனாண்டாள் முரளி ஆழ்ந்த இரங்கல்!
சாதனை நாயகன் இயக்குனர் இமயம்
பாரதிராஜாவுக்கு ஸ்ரீ தேனாண்டாள் முரளி ஆழ்ந்த இரங்கல்!
சென்னை 10 ஜூன் 2026 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ தேனாண்டாள் முரளி (என். இராமசாமி) பாரதிராஜா மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் அதில்,”” சாதாரண மனிதர்களும் சாதனை படைக்கலாம் , சிந்தித்து செயலாற்றினால் சிகரத்தையும் தொடலாம் என கிராமத்து மண்ணிலிருந்து வந்து செயல்படுத்தி சாதித்து காட்டியவர் பாரதிராஜா.
இவரது படைப்புகளான திரைப்படங்கள் அனைத்தும் வாழ்வியலில் உள்ள எதார்த்தங்களை பிரதிபலிப்பதாக இருக்கும்.
புதுமுகங்களை அறிமுகப்படுத்தி தயாரிப்பாளர்களை வாழ வைத்தவர் பாரதிராஜா.
இவரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு நிறைய இயக்குனர்கள் வந்து சாதனை படைத்துள்ளனர்.
1977-ல் 16 வயதினிலே படத்தின் மூலம் இவரது திரைப்பயணம் துவங்கியது. இவரது படைப்புகள் இவருக்கு மத்திய மாநில விருதுகளை பெற்று தந்தது.
இவரது சிந்தனை, சமூக சீர்கேட்டை தட்டி கேட்கும் படங்களாகவும், திரைப்படங்களில் யதார்த்தம் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கலாம் என ஆணித்தரமாக சொன்னவர்.
இவருடைய ஒவ்வொரு படமும் தலைமுறைகள் தாண்டியும் வாழும் .
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கி அதன் தலைவரானவர்.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், வினியோகஸ்தராகவும், மிளிர்ந்தவர்.
சாதீயத்தை சாட்டை கொண்டு அடித்து விரட்டும் படங்களாக தந்தவர் பாரதிராஜா.
46 படங்களை இயக்கியவர். கதைக்கும் , வசனத்திற்கும் புது பரிணாமம் தந்தவர்.
தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான பாரதிராஜாவின் மறைவிற்கு எனது நிறுவனம் சார்பிலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்ற முறையில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.











