‘சிங் கீதம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அஹில்யா பாம்ரூ, அயன், ஷாலினி கொண்டேபுடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா,
பானர்ஜி, வம்சீ, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.

ஒளிப்பதிவாளர் :- அங்கூர் சி.

படத்தொகுப்பாளர் :-

இசையமைப்பாளர் :- தேவி ஸ்ரீ பிரசாத்.

தயாரிப்பு நிறுவனம் :- வைஜெயந்தி மூவிஸ். ஸ்வப்னா சினிமா.

தயாரிப்பாளர் :- நாக் அஸ்வின்‌.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  3.5./5.

குபேரபுரம் என்ற ஓர் ஊரில்  சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் தொழிலில் ஈடுபடும் அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பணிபுரிந்து வருகிறார்கள்.

சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் அந்த ஊரில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பல்வேறு விபத்துகளில் மூலம் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மக்கள் போராடுகிறார்கள்.

அந்த ஊரில் ஒரேஒரு மரம் மட்டும் இருக்கிறது.

அந்த மரத்தை தனது தாயாக நினைக்கிறாள் அஹில்யா பாம்ரூ.

அந்த மரத்தை வெட்ட வருபவர்களைத் தடுத்து நிறுத்த கதாநாயகி அஹில்யா பாம்ரூ, போராடுகிறாள்.

ஆனாலும் தனது தாயாக நினைத்த மரத்தை வெட்டி வீழ்த்தப்படுகிறது.

இந்த நிலையில் அந்த ஊர் தங்கச் சுரங்கத்தின் அதிபரின் மகன் என்று கதாநாயகன் அயான் அந்த ஊருக்குள் நுழைகிறான் .

கதாநாயகி அஹில்யா பாம்ரூ, நெருங்கி பழகுகிறான்.

கதாநாயகன் அயான் சுரங்க முதலாளியின் உண்மையான வாரிசா என்று ஊரில் உள்ள மக்களுக்கு சந்தேகம் வர   ஆனால் வியாபாரத்துக்காக கதாநாயகன் அயான் நடிக்க வைப்பதாக ஏற்பாடு செய்துள்ளார்களா?

ஆனால் கதாநாயகன் அயான் உண்மையான வாரிசு என்று நிரூபிக்க  முயல்கிறான்.

இந்த நிலையில் அந்த ஊரில் பேசிக் கொண்டிருந்த அனைவரும் திடீர்னு பாட ஆரம்பிக்கிறார்கள்.

அனைவருக்கும் பேச்சு பேச முடியாமல் பாட்டாகவே வரும் நிலையில். இது இந்த ஊரில் உள்ள குபேரனின் சாபம் என்று ஊர் மக்கள் அனைவரும் நம்புகிறார்கள்.

இந்த சாபத்திலிருந்து விமோசனத்திற்காக ஊரில் உள்ள மக்கள் அனைவரும் என்னென்னவோ செய்கிறார்கள்.

அந்த நிலையில் ஊரில்  கர்ப்பிணியாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் அந்தச் சுரங்கத்தில் இறந்து விட இந்த சாபத்திக்கு காரணம் என்று தெரிந்து கொள்கிறார்கள் .

அந்தச் சுரங்கம் ஆபத்து கொண்டதாக இருப்பதாக அந்த ஊர் மக்கள் அனைவரும்  அஞ்சுகிறார்கள்.

அதே போல் மீண்டும் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் அந்தச் சுரங்கத்தில் சிக்கிக் கொள்கிறாள்.

அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு சுரங்கத்தில் பிரசவம் நிகழ்கிறது .

குழந்தை பெற்றுக் கொண்டு அவள் உயிர் தப்பினாரா?, உயிர் தப்ப வில்லையா?,

அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சாப விமோசனம் கிடைத்து பேச ஆரம்பித்தார்களா?, பேச ஆரம்பிக்க வில்லையா?,

அந்தச் சுரங்கத்தில் இருந்து அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும்  உயிருடன் மீண்டும் வெளியே வந்தார்களா?, வெளியே வரவில்லையா?, என்பதுதான் இந்த ‘சிங் கீதம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சிங் கீதம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அயான்  நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அயான் மிகவும் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த ‘சிங் கீதம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அஹில்யா பாம்ரூ, நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அஹில்யா பாம்ரூ, தாயைப் போல் பாவிக்கும் மரத்தை வெட்டும் போது மற்றும் ஊர் மக்களுக்காக போராடும்போது மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி, அனைவருமே மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அங்கூர் சி ஒளிப்பதிவு மூலம் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

தனது 94 வது வயதில் இப்படி ஒரு கதை மற்றும் திரைக்கு அமைத்து இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ள மூத்த இயக்குனர் சீங்கீதம் சீனிவாசராவ் அவர்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில், இந்த ‘சிங் கீதம்’ திரைப்படம் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான  அனுபவத்தைத்  கொடுத்திருக்கிறது.

error: Content is protected !!