ப்ராமிஸ்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- நதியா சோமு, அருண்குமார் சேகரன், சுஜன், பிரதாப், அம்ரிஷ், கனிஷ்கா, ராஜா ஏ எஸ், ராஜ்குமார், கோகுல், கார்த்திக் ஸ்மித் & குணா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அருண்குமார் சேகரன்.

ஒளிப்பதிவாளர் :- வினோத் குமார் BFT.

படத்தொகுப்பாளர் :- ஸ்ரீராம் விக்னேஷ்.

இசையமைப்பாளர் :- சரவண தீபன்.

தயாரிப்பு நிறுவனம் :- சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் & அம்மன் ஆர்ட்ஸ்  கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- நாகராஜ் என் & அருண்குமார் சேகரன்.

மக்கள் தொடர்பு :- சக்தி சரவணன்.

ரேட்டிங் :-  3.5./5.

ஒரு தனியார் கம்பெனியில்  விற்பனை பிரிவில் பணியாற்றி வரும்  கதாநாயகன் அருண்குமார் சேகரனும், கல்லூரி மாணவியான கதாநாயகி நதியா சோமுவும் இருவரும் காதலித்து வருகின்றனர்.

கதாநாயகன் அருண்குமார் சேகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதை தெரிந்து  கொள்ளும் கதாநாயகி நதியா சோமு, இனிமோல் மது அருந்துவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும், என கதாநாயகன் அருண்குமார் சேகரனிடம் சத்தியம்  வாங்குகிறார்.

சில நாட்களிலேயே தன்னுடைய காதலி கதாநாயகி நதியா சோமு, செய்துக் கொடுத்த சத்தியத்தை உதாசினப்படுத்திவிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கதாநாயகன் அருண்குமார் சேகரன் மீண்டும் குடிப்பழக்கத்தை தொடங்குகிறார்.

கதாநாயகன் அருண்குமார் சேகரன் மீண்டும் குடிப்பழக்கத்தை தொடங்கியதை அறிந்து வருந்தும் கதாநாயகி நதியா சோமு, கதாநாயகன் அருண்குமார் சேகரன்  பேசுவதை தவிர்க்க, தனது காதலும் காதலியின் பிரிவால் கதாநாயகன் அருண்குமார் சேகரன் தொடர்ந்து குடிக்க அடிமை ஆகிறார்.

குடிக்கு அடிமையானதை அறிந்து கதாநாயகன் அருண்குமார் சேகரனை சந்தித்து சமாதானப்படுத்தி கதாநாயகி நதியா சோமு,  திருமணமும் செய்துக் கொள்கிறார்.

கதாநாயகன் அருண்குமார் சேகரன் கதாநாயகி நதியா சோமு, திருமணம் ஆகி
மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்க, அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக கதாநாயகி நதியா சோமு கர்ப்பம் ஆகிறாள்.

இதையடுத்து கதாநாயகன் அருண்குமார் சேகரன் கதாநாயகி நதியா சோமு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கதாநாயகன் அருண்குமார் சேகரனின் பரிசோதனை முடிவு, பேரதிர்ச்சியை அளிக்கிறது.

கதாநாயகன் அருண்குமார் சேகரன் கதாநாயகி நதியா சோமு இருவரும் காதலில் வெற்றி பெற்று, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையிலும், வெற்றி பெற்று ஒரு குழந்தைக்கு தந்தையாகும் போகும் சந்தோஷத்தில் இருக்கும் நிலையில்  வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்த பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் கதாநாயகன் அருண்குமார் சேகரனின் மருத்துவ முடிவு, வாழ்க்கையில் தனக்கு படிபடியாக கிடைத்த அனைத்து மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்தமாக கிடைக்காமல் போகிறது.

அதன் பிறகு கதாநாயகன் அருண்குமார் சேகரனின்  வாழ்க்கை என்னவானது ?, அவரது மருத்துவ முடிவின் பின்னணி என்ன ? என்பதுதான் இந்த ‘ப்ராமிஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ப்ராமிஸ்’ திரைப்படத்தில் இயக்கி கதாநாயகனாக அருண்குமார் சேகரன் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தை இயக்கி  கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் சேகரன், மிகவும் எளிமையான தோற்றத்தில், கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும் இருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் சேகரனின் உடல்மொழி மற்றும் ஏற்றமும், இறக்கமும் இல்லாத அளவான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

சங்கமித்ரன் என்ற கதாபாத்திரமாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்களில் மனதில் எளிதில் பதிய வைத்து விடுகிறது.

இந்த ‘ப்ராமிஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நதியா சோமு, நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நதியா சோமு, நமது பக்கத்து வீட்டில் உள்ள பெண் போல் மிக மிக எளிமையான முகத்தோடும், செயற்கைத்தனம் இல்லாத அழகோடும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நதியா சோமு, மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம்  சேர்த்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல், கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார், கலைவாணி ஆகியோர் புதுமுகங்கள் என்று தெரியாதவாறு மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அனைவரும் புதியவர்கள் என்றாலும், தங்களுக்கு கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வினோத் குமார் ஒளிப்பதிவு மூலம்  ரசிக்கும்படியாக மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சரவண தீபன் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப மிக அருமையாக பயணித்திருக்கிறது.

யார் ஒருவருக்கு செய்து கொடுக்கும் சத்தியத்திற்கு மதிப்பளிக்காமல் போவது  வாழ்க்கையில் பல விளைவுகளை உண்டாக்கும், என்ற  கதையை  மிகவும் சிறப்பான, திரைக்கதையில் மது போதையும், அதனால் ஏற்படும் பேராபத்தையும் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் அருண்குமார் சேகரன்.

மொத்தத்தில், இந்த ‘ப்ராமிஸ்’ திரைப்படம் மது போதையும், அதனால் ஏற்படும் பேராபத்தையும் சிறப்பாக கூறியிருக்கிறார்.

error: Content is protected !!