இசைஞானி இளையராஜா மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் 25வது திரைப்படம் ‘கடவுள் தந்த பரிசு’!

இசைஞானி இளையராஜா மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் 25வது திரைப்படம் ‘கடவுள் தந்த பரிசு’!

சென்னை 07 செப்டம்பர் 2026 திரையுலகில் தனது 50வது வருடத்தில் ராஜநடை போட்டு, பவனி வரும் இசைஞானி இளையராஜா, மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குனர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள்.

செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார்கள்.

இசைஞானியும், மக்கள் நாயகனும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ஏங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாடல் பதிவுடன் பணிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இசைஞானி இளையராஜா  அவர்கள் இசையில் மக்கள் நாயகன் ராமராஜன் இணைந்த திரைப்படங்கள்.

1. எங்க ஊரு பாட்டுக்காரன்
2. கிராமத்து மின்னல்
3. செண்பகமே செண்பகமே
4. ராசாவே உன்னெ நம்பி
5. பார்த்தால் பசு
6. என்னை விட்டுப் போகாதே
7. எங்க ஊரு காவக்காரன்
8. என்னைப் பெத்த ராசா
9. பொங்கி வரும் காவேரி
10. எங்க ஊரு மாப்பிள்ளை
11. கரகாட்டக்காரன்
12. ராஜா ராஜாதான்
13. அன்புக் கட்டளை
14. தங்கமான ராசா
15. பாட்டுக்கு நான் அடிமை
16. ஊரு விட்டு ஊரு வந்து
17. புதுப்பாட்டு
18. ஊரெல்லாம் உன் பாட்டு
19. பொண்ணுக்கேத்த புருஷன்
20. வில்லுப் பாட்டுக்காரன்
21. தேடி வந்த ராசா
22. தெம்மாங்கு பாட்டுக்காரன்
23. அண்ணன்
24. சாமானியன்
25. கடவுள் தந்த பரிசு

error: Content is protected !!