இசைஞானி இளையராஜா இசையில் புதிய பிரம்மாண்ட படைப்பு: “இராவணன் சோலையில் சிவன் மலை” பூஜை இனிதே துவங்கியது!

இசைஞானி இளையராஜா இசையில் புதிய பிரம்மாண்ட படைப்பு: “இராவணன் சோலையில் சிவன் மலை” பூஜை இனிதே துவங்கியது!

சென்னை 14 செப்டம்பர் 2026 இசைஞானி இளையராஜா இசையில்  இப்படத்தின் பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது.

திரு இசைஞானி இளையராஜா,  திரு கங்கை அமரன்,  திரு இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா இனிதே துவங்கியது..

தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். 

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம், இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்டமாக படப்பிடிப்பு துவங்குகிறது.

இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எம் வி பன்னீர்செல்வம்
எடிட்டிங் –  காசி விஸ்வநாதன்
சண்டைப்பயிர்ச்சி – மைக்கேல்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு

CLOSE
CLOSE
error: Content is protected !!