லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது !

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது !

சென்னை 06 ஜூன் 2025 தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள்ளை கொண்ட “புகழ்” கதாநாயகனாக நடிக்க எதிர் நாயகனாக முரட்டு நகைச்சுவை மன்னன் ரவி மரியா நடிக்கிறார்.

அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார் கையாள, இசையை சுபாஷ் முனிரத்தினம் அமைக்க, கலையை மு. து. பிரபாகரன் கவனிக்க, படத்தொகுப்பை ஃபாசில் தொகுக்க, கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சஜோ சுந்தர். தயாரிப்பு மேற்பார்வை ச. அருணாச்சலம்.

காமெடி திரில்லர் ஜானரில் உருவாகும் இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளிப்பதிவாளர் சிவா இணைந்து கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, சித்ரா லட்சுமணன் கிளாப் அடித்து இனிதே துவக்கி வைத்தனர்.

எம். ஸ்ரீ வத்சன், எம். கோகுல் கிருஷ்ணன் தயாரிக்கிறார்கள்.

இணை தயாரிப்பு வி. கே. முருகேசன், திருப்பூர் ஜியோ ஏ. என். செல்வராஜ்.

CLOSE
CLOSE
error: Content is protected !!