ஒரே இரவு… எதிர்பாராத அதிர்ச்சிகள்… உயிரைப் பணயம் வைக்கும் போராட்டம்! இனிகோ பிரபாகரின் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பரில் திரைக்கு வருகிறது!
ஒரே இரவு… எதிர்பாராத அதிர்ச்சிகள்… உயிரைப் பணயம் வைக்கும் போராட்டம்! இனிகோ பிரபாகரின் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பரில் திரைக்கு வருகிறது!
சென்னை 28 அக்டோபர் 2026 நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது. அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதே கதை,” என்றார்.
‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்திற்கு சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை எஸ்.என். பாசில் கையாண்டுள்ளார். ஸ்டண்ட்: மிரட்டல் சிவா, கலை இயக்கம்: தேவராஜ், ஒப்பனை: சி. முத்து சுடலை, உடைகள்: கார்த்திக் தமிழ்வாணன், ஸ்டில்ஸ்: பாவிஷி பாலன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘மின்னும் ஓர் இரவு’ நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.













