நேற்றைய நிலுவைகளுக்கு இன்று தீர்வு… நாளைய வளர்ச்சிக்கு இன்றே திட்டம்! ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கியக் கலந்துரையாடல்!

நேற்றைய நிலுவைகளுக்கு இன்று தீர்வு… நாளைய வளர்ச்சிக்கு இன்றே திட்டம்! ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கியக் கலந்துரையாடல்!

சென்னை 14 நவம்பர் 2026 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தயாரிப்பாளர்களின் நலன் குறித்த முக்கியக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களும் முன்னாள் தலைவர்களுமான திரு. எஸ்.ஏ. சந்திரசேகரன், திரு. கேயார், கலைப்புலி எஸ். தாணு, திரு. டி.ஜி. தியாகராஜன்; முன்னாள் செயலாளர்களான திரு. ஏ.எல். அழகப்பன், திரு. டி. சிவா; முன்னாள் பொருளாளர்களான திரு. கஹஜா மைதீன், திரு. சந்திரபிரகாஷ் ஜெயின்; திரு. வி.சி. குகநாதன், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர்கள் திரு. ஐசரி கே. கணேஷ், திருமதி கமிலா நாசர் மற்றும் நடிகரும் தயாரிப்பாளருமான திரு. தியாகராஜன் உள்ளிட்ட திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், சங்கத்தின் துணைத் தலைவர் திரு. எஸ். கமலக்கண்ணன், செயலாளர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் திரு. சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் திருமதி சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி, தயாரிப்பாளர்களின் நலன், அவர்களின் தொழில் சார்ந்த சவால்கள் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தயாரிப்பாளர்களின் ஒற்றுமையையும் நலனையும் முன்னிறுத்தி, திரையுலகின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.இதனிடையே, கடந்த 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை மானியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்ததற்கும், பண்டிகைக் காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஒரு வாரத்தில் ஆறு காட்சிகள் திரையிட அனுமதிக்கும் வகையில் அரசாணை பிறப்பித்ததற்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இதற்குத் துணைநின்ற மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.தயாரிப்பாளர்களின் நலனைப் பாதுகாப்பதோடு, தமிழ்த் திரையுலகின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் புதிய வழிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டம், சங்கத்தின் எதிர்காலப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது.

CLOSE
CLOSE
error: Content is protected !!