பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் ஆதி

இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் தீவிரமாக உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களிலும், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாக நடிக்கவும் ✍ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!