தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளனும்.; ரஜினிகாந்த்க்கு எதிராக விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு.?
பிரபல தயாரிப்பாளர், அபிராமி ராமநாதனின், 73வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.
இதில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான, எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
தமிழன் எங்கிருந்தாலும் அவனுக்கு பெருமை தான். அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் வல்லுனர்கள் பலரும் தமிழர்கள்தான்.
மத்திய அரசு விருது கொடுத்தால் தான், தமிழனுக்கு பெருமை வரும் என்று அர்த்தமில்லை.
தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பேசினார்.
இவரின் பேச்சுக்கு ரஜினிகாந்துக்கு எதிரான கருத்தாக இருக்குமோ? என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் கட்சி தொடங்கவுள்ள ரஜினிகாந்த் வெளி மாநிலத்தவர் என்பதால் எஸ்ஏசி.யின் இந்த பேச்சு அரசியல் உலகில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.











