அடுத்த சூப்பர் ஸ்டாராக உலகம் உன்னை கொண்டாட காத்திருக்கிறது- ஷோபா சந்திரசேகர்

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் தளபதி விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், “தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட இந்த உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்” என கூறியுள்ளார்.

error: Content is protected !!