இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘குயின்’ இணைய தொடருக்கு புதிய பிரச்சனை

என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் பிரச்சனைக்குள்ளானது. இதே போல் ‘துருவ நடசத்திரம்’ படமும் எப்போது வருகிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘குயின்’ இணைய தொடருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதாவின் மருமகன் தீபக், ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி என் குடும்பத்தினரின் அனுமதி இன்றி எந்த ஒரு படமோ, தொடரோ எடுக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!