ஹிட்லிஸ்ட்’டில் இணைந்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.!

ஹிட்லிஸ்ட்’டில் இணைந்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.!

சென்னை 11 மே 2023 இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கே செல்லுலாய்ட்ஸ், ஏற்கனவே தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தயாரித்திருந்த நிலையில் தற்போது ‘ஹிட்லிஸ்ட்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் அவரது முதல் படமாக இது உருவாகி வருகிறது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பயங்கரமான வில்லனாக நடிப்பதன் மூலம் இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலில் தற்போது இணைந்துள்ளார். அவர் நடித்த சில முக்கியமான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.

இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்சரண் கையாள, படத்தொகுப்பை ஜானும் கலை இயக்கத்தை அருணும் கவனிக்கின்றனர்.

ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படத்திற்கு தேவையான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஆக்சன் திரில்லராக இந்த படம் இருக்கும். கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கும் இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.