‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில்பேசிய நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்

சமீபத்தில் நடந்த பிகில் பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த விவகாரத்திலும் அவர் அரசை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் “நடிகர் விஜயை கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என்று என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டியது இல்லை. திரைப்பட நடிகராக தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக சிலர் பரபரப்பாக பேசுகிறார்கள்.

நடிகரும் விஜய்யும் யாருடைய பேச்சை கேட்டு சொன்னார் என்று தெரியவில்லை. அவருடைய படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது, அவருடைய மனசாட்சிக்கு தெரியும். மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாக தான் வைத்துள்ளர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!