நடிகர் விஜய் படத்திற்கு தீபாவளிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி

நடிகர் தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு.

அதற்கான டிக்கெட்டுக்கள் கடந்த இரண்டு நாட்களாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சிறப்பு காட்சியை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். மேலும் தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தினை திருப்பிக்கொடுக்க வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!