பிகில்’ படத்தின் போஸ்டர் சர்ச்சை – இறைச்சி கடைக்காரர்களுக்கு பரிசு*
இயக்குனர் அட்லீ – நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’ படத்தின் போஸ்டரில், இறைச்சி வெட்டும் முட்டி(கட்டை) மீது செருப்புக் கால் வைத்து நடிகர் விஜய் அமர்ந்திருப்பது, தங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி கறிக்கடை உரிமையாளர்கள் கோபால் என்பவரது தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த நடிகர் விஜய் ரசிகர்கள் இறைச்சி வெட்டும் கட்டைகளை இறைச்சி கடைக்காரர்களுக்கு பரிசாக கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.











