மெரீனா கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலையை பராமரிக்கப்படாமல் இருந்ததை சமத்துவ மக்கள் கட்சியினர் சுத்தம் செய்தனர்!?
மெரீனா கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலை சரியாக பராமரிக்கப்படாமல் அழுக்கடைந்த நிலையில் உள்ளதென இன்று பத்திரிகையில் செய்தி வந்தததை அறிந்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அவர்கள் அவரது கட்சியின் மாநில துணை பொது செயலாளர் திரு சேவியர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் பெருந்தலைவரின் சிலையை சுத்தம் செய்யுமாறு கூறி அதனை உடனடியாக நிறைவேற்ற செய்துள்ளார்.
“தமிழ் நாட்டை தலை நிமிற செய்த தலைவர்களின் நினைவு சிலைகளையும் அவர்களை போன்றே என்றென்றும் கம்பீரத்துடன் நிற்க வேண்டுமென்றால் அதை பொதுமக்களாகிய நாம் பாதுகாக்கவேண்டும் என்றும், தலைவர்களின் சிலைகளை அரசாங்கம்தான் சுத்தம் செய்ய வேண்டுமென்பது இல்லை, நாம் அனைவரும் போற்றி பாதுகாப்போம்” என்றும் சரத்குமார் கூறினார்












