குண்டு பெண் என்று என்னை அனைவரும் கேலி செய்தனர்- வித்யாபாலன்

நடிகை வித்யாபாலன் தற்போது தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில்  நடித்து வருகிறார்..

இந்நிலையில் சிலர் வித்யாவின் பருமனான தோற்றத்தை கிண்டல் செய்ததை குறித்து பேட்டிஒன்றில்  கூறும்போது.., யாருடைய உடல் தோற்றத்தையும், நிறத்தையும் கிண்டல் செய்து சிரிக்காதீர்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.

எல்லோருமே ஒரு வகையில் சிறப்பானவர்கள் தான். சினிமாவில் நான் நுழைந்த கால கட்டத்தில் பலரும் என் மன வலிமையை பலவீனப்படுத்தும் வகையில் அவமரியாதை செய்தார்கள். குண்டு பெண் என்று அழைத்து கேலி பேசினார்கள்.

இது எனது தன்னம்பிக்கையை பாதித்தது. உடல்தோற்றம் மட்டுமே ஒருவரை சாதனையாளராக்கப் போவதில்லை என்பதை கிண்டல் பேசுபவர்கள் உணர வேண்டும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!