நடிகர் தனுஷ் நடிப்பில் ‘அசுரன்’ திரைப்படம் அல்ல பாடம் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பாராட்டு

நடிகர் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் சமீபத்தில் வெளியாகிய படம் ‘அசுரன்’. இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் இந்த படத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு ’அசுரன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று நேற்று திரையிடப்பட்டது. பின்னர், “பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்” என்று ‘அசுரன்’ படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

error: Content is protected !!