உலக நாயகன் கமல்ஹாசன் கண்டிப்பாக ஒருநாள் ஜனாதிபதி ஆவார் ‼*
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்று வரும் பிறந்த நாள் விழாவில் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் பிரபு பேசுகையில், எனது திரையுலக வாரிசு கமல்ஹாசன் மட்டும்தான் என தனது தந்தை சிவாஜிகணேசன் கூறியதாக தெரிவித்தார். மேலும் கமல்ஹாசன் ஒரு நாள் ஜனாதிபதி ஆவார் என்றும் அனைவரும் ஜனாதிபதியாக கமலஹாசனை பார்ப்போம் என்றும் சிவாஜி கூறியதாக பிரபு தெரிவித்தார்.











