டி.என்.சேஷன் மறைவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் இரங்கல்*
இந்திய தேர்தல் ஆணையத்தின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 1990ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பதவி வகித்து தேர்தலில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து, அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் நியாயமான தேர்தல்களை நடத்தியவர் டி.என்.சேஷன். இவர் நேற்று இரவு உடல்நிலை காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தைரியம், நம்பிக்கை உருவகமாக நினைவு கூறப்படுபவர் டி.என்.சேஷன் என்றும், தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் என்றும் குறிப்பிட்டு தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
TN Seshan will be remembered as an embodiment of courage & conviction. It was he who brought the powerful role of the “Election Commission” into the drawing room discussion of the Common Man.
— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2019











