நடிகர் உதயநிதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்*

‘அசுரன்’ திரைப்படத்தை பார்த்த பின்னர் பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார். இதனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய, பாமக தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் முரசொலி நில விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19ம் தேதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!