நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார்!!!

சென்னை 27 ஜூலை 2022 நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கிறார்!!!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக நடிகர் தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதைத் தொடர்ந்து ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்
அதன் பின்னர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார்.

நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் இவர்கள் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி திரைப்படங்களை தயாரித்த,
உலகநாயகன் கமல்ஹாசன்
அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் சார்பில் தயாரிப்பாளர் திரு.ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிக்கவிருக்கிறார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்த திரைப்படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.