மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் என்கின்ற கல்விமுறைக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் நடிகர் சூர்யா.
நீட் தேர்வு பயத்தில் மூன்று மாணவர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த தமிழகத்தில் தற்கொலை மற்ற மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த தற்கொலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது
தேர்வேழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல் அவலம் எதுவுமில்லை கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்க படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது.
ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.
கொரோனா தொற்று அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்ளை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது இறந்துபோன மாணவர்களின் மரணத்தில் கூட எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்கும் சாலைகளில் அனல் பறக்க விவாதிப்பார்கள்.
நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.
அனுநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக் கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கின்ற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது.
மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நமது கல்வி முறையில் இனி பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுமே இனிமேல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது பிள்ளைகளின் தகுதியையும் திறமையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.
இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்த துணை நிற்பது போலவே மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் ஏற்படுத்த வேண்டும்.
அன்பு நிறைந்த குடும்பம் உறவு நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.
மகாபாரத காலத்து துரோணர்கள் எகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள்.
நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வு எழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற எளிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.
ஒரேநாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களை கொன்று இருக்கிறது.
இன்று நடந்தது நேற்றும் நடந்தது இனி நாளையும் நடக்கும் நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது.
சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.
My heart goes out to the three families..! Can't imagine their pain..!! pic.twitter.com/weLEuMwdWL
— Suriya Sivakumar (@Suriya_offl) September 13, 2020











