இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் உணர்வு பூர்வமான, சஸ்பென்ஸ் மற்றும் ஃபேண்டஸியான காதல் கதை விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் !!
இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் உணர்வு பூர்வமான, சஸ்பென்ஸ் மற்றும் ஃபேண்டஸியான காதல் கதை விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் !!அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில், ரஜித் மேனன் நடிப்பில் உருவாகும் ஃபேண்டஸி காதல் கதை!
பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Black and White Media Solutions Private Limited) நிறுவனம் சார்பில் ஜூட் ஆனந்த்.டே (D Jude Anantth) தயாரிப்பில், உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
விளம்பர படங்கள் மற்றும் கார்ப்பரேட் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் வீஜெ. மீனாட்சி சுந்தரம், இப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
1983 மற்றும் 2023 என இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதையை காதல் மற்றும் ஃபேண்டஸியாக சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல இருப்பதாக தெரிவித்த இயக்குநர், தற்போது படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.
இதில் கதாநாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித்.CR நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விருது பெற்ற கன்னட திரைப்படமான ‘கோழி எஸ்ரூ’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சீஸ் ராஜ்குமார்.ஏ (Francis Rajkumar A) ஒளிப்பதிவு, இசைத்துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த ஷீன் எல்.க்ளஃபோர்ட் (Shean L.Cleford) இசை, ‘யாத்திசை’ மற்றும் ‘ஞானசெருக்கு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு, என பலம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு தரமான படமாகவும், கமர்ஷியல் ரீதியாக பிரமாண்டமாகவும் இப்படம் உருவாக உள்ளது.
கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.
Related posts:
விகடன் தயாரிப்பில் உருவான ‘ஆதலினால் காதல் செய்வீர்’ வெப் சீரிஸ் யூட்யூப்பில் இனிதே ஆரம்பம்.
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் மனதை வருடும் காதல் பாடலான நின்னே நின்னே-வை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்
“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு.!
“ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் அடுத்த படம் ஜனவரி 17 முதல் படப்பிடிப்பு ஆரம்பம் !
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்.!!
காதல்’.. அன்றும், இன்றும், என்றும் சினிமாவுக்கான சிறப்பான, புதிதான கதைக்களம் யூடியூப்பில் வெளியானது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம்.
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் ‘குஷி’- இரண்டாவது சிங்கள் ‘ஆராத்யா’, ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது.!!
நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது !

