Thursday, July 29
Shadow

நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி !

சென்னை : 19 அக்டோபர் 2020

இரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடர்ந்து தன் நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்ணனி பாத்திரத்தில் நடிக்க, ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) தயாரிக்கும் “பூமிகா” படத்தின் டைட்டில் லுக் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்தது. தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி வெளியிட்டிருக்கும் “பூமிகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் அர்த்தங்கள் கொண்டதாக, அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.

இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் இது குறித்து கூறியதாவது….

எங்களின் படக்குழு சார்பாக, மிகுந்த எளிமையுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தந்தமைக்கு நடிகர் ஜெயம்ரவிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முதலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டபோது நடிப்பு திறமை மிக்க ஆளுமை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி அவர்களை அணுகியபோது, எந்தவித தயக்கமுமில்லாமல் உடனடியாக ஒத்துக்கொண்டு, எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தந்தார்.

மேலும் படம் குறித்து கூறும் போது, “பூமிகா” திரைப்படம் ஒரு ஆழமான உணர்வுகளுடன் கூடிய திரில்லர் படமாக, பல எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். தனிப்பட்ட வகையில் ஐஷ்வர்யா ராஜேஷ் உடைய அசரவைக்கும் நடிப்பு எனக்கு பெரும் திருப்தியை அளித்தது. அவர் இப்படத்தின் ஆரம்பகட்டத்தில் இருந்தே, மிகுந்த உற்சாகமுடன், கடுமையான ஈடுபாட்டுடன் இப்படத்தில் பங்கேற்றார். நீலகிரியில் படப்படிப்பு நடைபெற்றபோது, பலவிதமான பருவ நிலை மாறுபாடுகளால் படக்குழு மொத்தமுமே கடும் இன்னல்களுக்கு உள்ளானது. ஆனால் அப்போதும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கடுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் ஒவ்வொரு ஷாட்டிலும் அற்புதமான நடிப்பை வழங்கினார். ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில், தொடர்ந்து தரமான படங்களை தந்து, தனக்கென தனி முத்திரையை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இப்படத்தில் எனக்கு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. நாங்கள் ஒட்டுமொத்த குழுவாக கடுமையான உழைப்பில் மிகச்சிறந்த படைப்பாக இப்படத்தை தருவோம். கண்டிப்பாக இத்தயாரிப்பு நிறுவனத்தின் தரமான படமெனும் முத்திரையை இப்படம் பெறும்.

இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் ரிலீஸாகவுள்ள “இது வேதாளம் சொல்லும் கதை” படம் மூலம் திரை கலைஞர்களிடம் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறார். பல பிரபல திரைப்படங்களில் ரசிகர்களின் கவனம் குவித்த பாவெல் நவகீதன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் தமிழின் திறமைமிகுந்த பல புதுமுகங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

Read Also  இனி நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படங்களை தியேட்டரில் வெளிவிட செய்ய முடியாது வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ)

ஒளிப்பதிவாளர்ராபர்டோ ஜாஜாரா ( Roberto Zazzara ) உடைய அட்டகாச ஒளிப்பதிவு படத்தை பன்மடங்கு மெருகேற்றும்படி அமைந்துள்ளது. வெறும் விஷுவல் மேஜிக்காக மட்டுமில்லமல் கடும் பருவ நிலை மாறுபாடுகளுக்கிடையே, ஒளிபற்றாக்குறையிலும் அவரது திறமையான ஒளிப்பதிவு கண்டிப்பாக பெரிதாக பேசப்படும்.

ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறியதாவது….

ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டததற்காக நடிகர் ஜெயம்ரவிக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரால் பூமிகா படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. டைட்டில் லுக்கிற்கு கிடைத்த பெரும் வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அதே நேரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் பெரும் பொறுப்புணர்வையும் தந்தது. ஐஷ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தன் சிறந்த நடிப்புத்திறமையால், மிக நல்ல கதாபாத்திரங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து, தமிழின் மதிப்பு மிகு நடிகையாக வளர்ந்து வருகிறார். விநியோக தளத்திலும் அவரது மதிப்பு பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது. ஆதாலால் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் எங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தது.

அந்த வகையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்துள்ள ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மிகச்சிறப்பான பணியை செய்துள்ள இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் மற்றும் அவரது குழுவிற்கு பாராட்டுக்கள். தற்போது ரசிகர்களுக்கு எங்கள் படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரை காட்ட பெரும் ஆர்வத்துடன் உள்ளோம். மிக விரைவில் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்

ஒளிப்பதிவு – ராபர்டோ ஜாஜாரா ( Roberto Zazzara )

இசை – ப்ரித்வி சந்திரசேகர்

படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின்

சண்டைப்பயிற்சி – டான் அசோக்

கலை – மோகன்

ஒலிக்கலவை – MR ராஜா கிருஷ்ணன்

ஒலியமைப்பு – ஸிங்க் சினிமா

ஒலிப்பதிவு செய்தவர் – தாமஸ் குரியன்

2D அனிமேஷன் – மனு ஆனந்த் & ஷாஜ் அஹமத்

கலரிஸ்ட் – பாலாஜி கோபால்

உடை வடிவமைப்பு – ஜெயலக்‌ஷ்மி சுந்தரேஷன்

மேக்கப் – வினோத் சுகுமாரன் & ராம் பாபு

விஷிவல் எபெக்ட்ஸ் – igene

விஷிவல் எபெக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் – தேவா சத்யா

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா

டிசைன்ஸ் – வெங்கி

தயாரிப்பு மேலாண்மை – D ரமேஷ் குச்சிராயர்

தலைமை விநியோக தொடர்பாளர் – செந்தில் முருகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு – பவன் நரேந்திரா

துணை தயாரிப்பு – M அசோக் நாராயணன்

Read Also  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியை. எதிர்த்து பாக்யராஜ் அணி போட்டி

இணைத் தயாரிப்பு – கல் ராமன், S. சோமசேகர், கல்யாண் சுப்ரமண்யம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படைப்பை கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) சார்பில் தயாரிக்கிறார்கள்.